Monday, April 24, 2017

ஒற்றை தலைவலியிலிருந்து விடுபட ஓமியோபதி சிகிச்சை


 ஒற்றை தலைவலி ஓமியோபதி சிறப்பு சிகிச்சை சென்னை தமிழ் நாடு


தலைவலி எல்லாருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய்.  அதில் சிலவகை வலிகள் வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாகயும் வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம்.
சாதாரண தலைவலியானது தலையில்  அமைந்துள்ள முகம் உட்பட தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது.
தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்

தலைவலி வகைகள்
  • Ø  மன உளைச்சல் தலைவலி – Stress headache
  • Ø  சைனஸ் தலைவலி Sinus Headache
  • Ø  விபத்துகளுக்குப் பின்னால் ஏற்படும் தலைவலி – Post traumatic headache
  • Ø  தமனிகள் தொடர்பான தலைவலி – Venous Headache,
  • Ø  தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி – Infection headache
  • Ø  வளர்சிதை மாற்றம் சம்பந்தமான தலைவலிv- Headache due to Physical problems,
  • Ø  தலையிலுள்ள கண், மூக்கு, பல், வாய் மற்றும் முகம் ஆகியவற்றின் உருவ அமைப்புடன் தொடர்புடைய தலைவலி. – Headache due to improper teeth, bones, eye problems, nose problems,
  • Ø  தலையிலுள்ள உறுப்புகளின் நரம்புகளில் பிரச்சனைகளால் வரும் தலைவலி- Nervous headache
  • Ø  குழந்தைகளுக்கு வரும் தலைவலி- children’s headache
  • Ø  வயதானவர்களுக்கு வரும் தலைவலி – Geriatric headache
  • Ø  ஒற்றைத் தலைவலி- Migraine head ache


Stress head ache - மன உளைச்சல் தலைவலி
  • v  கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.
  • v  இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.


Sinus Head Ache சைனஸ் தலைவலி
  • v    மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும். முன் மண்டை முழுவதும் பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.


Venous Head Ache - தமனிகள் தொடர்பான தலைவலி
  • v   மூளைக்கு குளுக்கோசும் ஆக்ஸிஜனும்தான் உணவு. இவை ரத்த நாளங்கள் (தமனி) வழியே மூளைக்குக் கிடைக்கின்றன. இவை செல்லும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மூளைக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காது. அப்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த தமனிகளின் பாதையில் கொழுப்புக் கட்டிகள் அடைத்துக் கொள்வதால் இந்தக் குழாய் இறுகி, ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் தடைபட்டுப் போகலாம். அப்போது அதன் அறிகுறிகளும் தலைவலியும் ஏற்படுகின்றன.


Haemorrhage Head ache - இரத்தக் கசிவால் ஏற்படும் தலைவலி
  • v    ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது அதிக அழுத்தம் காரணமாக வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது திடீரென அவருக்கு மண்டையைப் பிளப்பது போல தலைவலி ஏற்படும். இதுவே நீண்ட நேரத்திற்கு ரத்தக் கசிவு இருந்தால் மூளை வீங்கத் தொடங்கும்.


Head ache due to Physical problems,- வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலி
  • v   சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் தலைவலி ஏற்படும். அதோடு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், ரத்த சோகை, இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்.


Head ache due to Infectionதொற்றுகளினால் ஏற்படும் தலைவலி
  • v    எச்.ஐ.வி கிருமிகள் தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மூளையில் மெனிஞ்சைடிஸ் மற்றும் கட்டிகள் தாக்கத்தாலும் தலைவலி ஏற்படும். மூளையின் உள்ளே தொற்றுகளின் தாக்கத்தால் அழுத்தம் அதிகமாகிறது. அதனால் உள்ளே நாளங்கள் இழுக்கப்பட்டு தாங்கமுடியாத தலைவலி ஏற்படும். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பக்கூடிய இந்த வலி தலையை முன்னோக்கி குனியும்போது அதிகரிக்கும்.


Cluster Head ache ஒரே நாளில் பலமுறை விட்டுவிட்டு வரும் க்ளஸ்டர்  தலைவலி
  • v   தூங்க முடியாமல் கண் இமைகள் படபடத்து அடித்துக் கொள்ளும். வியர்த்துக் கொட்டும். காலை, மதியம், மாலை என்று எப்போது வந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சரியாகத் தாக்கும். நோயாளிக்கு அதிக எரிச்சலைக் கொடுக்கும். படுத்துக் கொண்டு இருப்பதைவிட உட்கார்ந்தால் சற்று சௌகரியமாக இருக்கும். இருட்டான அமைதியான அறையை நோயாளிகள் நாடுவார்கள். கண்ணைச் சுற்றியுள்ள தமனிகளின் அசாதாரணத் தன்மையால் இந்த வலி ஏற்படுகிறது.


Chronic Head ache நீண்ட நாள் தலைவலி
  • v    மாதம் 15 நாட்களுக்குத் தலைவலி வந்து தொல்லை தருகிறது. வலியின் தீவிரம், இடம், தன்மை என்று அதன் ஒவ்வொரு தாக்கத்திலும் வேறுபடும். அதுமட்டுமின்றி தலைவலியுடன் வயிற்றுப் புரட்டல், வாந்தி, எரிச்சல், மனச்சோர்வு, ஞாபகத்திறனில் பிரச்சனை, பதட்டம் போன்ற பல்வேறு பிரச்சனை களும் இவர்களுக்கு இருக்கலாம்.


Post traumatic headache - தலையில் அடி மற்றும் அது சார்ந்த தலைவலி
  • v   தலையில் சாதாரண காயம் ஏற்பட்டு அடிபட்ட 30 நிமிடங்களுக்குள் நினைவிழப்பு ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வாழ்நாள் முழுவதும்கூட இந்த தலைவலி தொடர வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்பட்டு 1 வாரம் முதல் 3 மாதங்கள் வரை எப்போது வேண்டு மானாலும் வலி ஆரம்பிக்கலாம்.


Migraine Headache - ஒற்றைத் தலைவலி
உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி
மைக்ரோன் தலைவலி Migraine என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பு தொடர்பான ஒரு நோயாகும்.
ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், தலையில் இருபக்கத்திலோ அல்லது ஒருபக்கமாகவோ பட படவென தலையில் துடிப்புடன் pulsating வலி வரலாம், ஒருநாள் அல்லது இரண்டு நாள் கூட தலைவலி நீடிக்கலாம்.. இதன் முக்கிய அறிகுறிகள் கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு ஆகும்.

ஒற்றைத் தலைவலி ஏற்பட சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்
  • ü   கண் பார்வையில் மாற்றங்கள் ஏற்படுதல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், "Z" வடிவங்கள் தெரிதல்),
  • ü   கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, உடற் சமநிலையில் இருக்காது,
  • ü   பேச்சில் தடுமாற்றம் ஏற்படும்,
  • ü   வாசனை பொருட்கள் முகர்ந்தால் தலைவலி வரும்/ அதிகமாகு. பூ செண்ட், வாசனைதிரவியங்கள் தலைவலியை அதிகமாக்கும்.
  • ü   இந்த எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் முதல் 1 மணி வரை காணப்படலாம்.


அதிக சத்தமும் வெளிச்சமும் ஒற்றைத் தலைவலியை அதிகப்படுத்தும். இதனால் ஒற்றைத்தலைவலியாம்அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான அறையில் ஓய்வெடுக்க விரும்புவார்கள்.

ஒற்றைத் தலைவலி ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும். ஆண்களுக்கு 25 – 55 வயதில் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். பெண்களுக்கு இன்னும் சற்று முன்பே ஆரம்பித்துவிட வாய்ப்பு உண்டு. மாதத்துக்கு ஒருமுறை முதல் ஐந்து முறைக்கு மேலும் வரலாம். தலையின் ஒருபக்கம் உள்ளே லேசாகத் துடிக்க ஆரம்பிக்கும். இது தொடர்ந்தும் இருக்கலாம். சிறிது இடைவெளி விட்டும் இருக்கலாம்.

ஒற்றைத் வலியின் ஆரம்ப அறிகுறி
  • ü   தினசரி வேலைகளைச் செய்ய முடியாதபடி வலி அதிகரித்தல்.
  • ü   சாதாரண வேலைகளைக் கூட செய்ய முடியாதபடி கடுமையாக இருக்கும்.
  • ü   திடீர் வயிற்றுப் புரட்டல் ஏற்படும். எந்த உணவுப் பொருளையும் பார்க்கவே பிடிக்காது.
  • ü   காரணமின்றி வாந்தி ஏற்படும்.
  • ü   ஒவ்வாத பொருளைச் சாப்பிட்டது போல, என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும்.
  • ü   ஒன்றுமே சாப்பிடத் தோன்றாது.
  • ü   வெளிச்சத்தினால் தலைவலி அதிகமாவதால் கதவுகளை மூடுவார்கள்.
  • ü   விளக்கை அணைத்துப் போர்வைக்குள் முடங்குவார்கள்.
  • ü   இருட்டு இவர் களுக்கு இதமாக இருக்கும்.
  • ü   குண்டூசி போட்டால் கேட்கும் சத்தம்கூட இவர்களுக்கு எரிச்சல் தரும்.
  • ü   நிசப்தமாக இருக்கும் இடத்தைத் தேடிச் செல்வார்கள்.



வலி தீவிரமடையும்போது
  • Ø   சுத்தியால் தலைக்குள் அடிப்பதுபோல் இருக்கும். கண்ணைத் திறக்க முடியாது. ஆளை நிலைகுலையச் செய்யும். சிலருக்குத் தற்கொலை எண்ணம்கூட தலை தூக்கும்.
  • Ø   தலைக்குள்ளே வெளிச்சம் மினுமினுப்பது போல இருக்கலாம். புள்ளியாகவும் தெரியலாம். பட்டை பட்டையாக பல நிறத்தில் பட்டைகள் தலைக்குள் பரவி வருவது போலத் தோன்றும்.
  • Ø   கழுத்து வலி வருவது இயல்பு. குனிய, நிமிர முடியாது. அது மட்டுமின்றி கண்கள் சிவந்து அரிக்கலாம். கண்ணிலிருந்து நீர் வடியலாம்.
  • Ø   தலைவலி ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • Ø   பலவித நிறங்களில் வெளிச்சம் தலைக்குள்ளே தெரிவதும் இருக்கலாம். சிலருக்கு எதிர்மாறாக பார்வையே பறிபோனது போல ஒரே இருட்டாகவும் இருக்கலாம்.
  • Ø   உடலின் ஒரு பகுதி உணர்ச்சியின்றி மரத்துப் போகலாம். தலைவலியுடன் சேர்த்து இந்த உணர்ச்சியின்மையும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • Ø   சிலருக்கு உடலின் ஒரு பாகத்தில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு இருக்கும். உடல் தளர்ச்சியுறும். பொதுவாக வலி ஆரம்பித்து அதன் தீவிர நிலையை அடைய 3 – 4 மணி நேரம் ஆகலாம்.



மைக்ரேன் தலைவலியை உண்டாக்கும் / அதிகப்படுத்தும் சில காரணிகள்
மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தின் சீர்க்கேடுகளால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

  • ¬   அதிக சூரியவெம்பம்,
  • ¬   வானிலை அழுத்த மாற்றங்கள்,
  • ¬   காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல்,
  • ¬   அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல்,
  • ¬   வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல்,
  • ¬   ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல்,
  • ¬   மதுவகைகள்,
  • ¬   சில கீரைகள்,
  • ¬   பாலடைக்கட்டி,
  • ¬   தயிர்,
  • ¬   வினிகர், சாக்லேட்,
  • ¬   ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல்,
  • ¬   ஈஸ்ட்ரோ ஜென் ஹேர்மோன்,
  • ¬   மிக அதிகமான உறக்கம்,
  • ¬   உறக்கமின்மை,
  • ¬   மிகைபசி,
  • ¬   இறைச்சி,
  • ¬   தலைவலி அடிபடுதல்,
  • ¬   உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள்,
  • ¬   அதிக மருந்து சாப்பிடுதல்,
  • ¬   மாதவிலக்கு,
  • ¬   கர்ப்பம். மோனோசோடியம் குளுட்டாமேட்,
  • ¬   கவலை,
  • ¬   மனஇறுக்கம்,
  • ¬   அசதி,
  • ¬   உடலுறவில் உச்சக்கட்ட நிலையை அடைவதற்கு முன்போ அல்லது பின்போ மண்டையைப் பிளப்பது போன்ற தீவிர வலி தோன்றலாம்.
  • ¬   வயாக்ரா போன்ற வேதிப் பொருட்கள் அடங்கிய மருந்துகளை ஆண்மை குறைபாடு உள்ள ஆண்கள் உபயோகிக்கும்போது ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
  • ¬   வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.


ஒருவருக்கு எந்தெந்த காரணிகள் தலைவலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் (காரணங்கள்)
  • Ø  மன அழுத்தம்
  • Ø  ஒரு முடிவெடுக்கத் தீவிரமாக யோசிக்கும் போது
  • Ø  அழும்போதோ, முடித்த பின்போ….
  • Ø  வானிலையில் மாற்றம் ஏற்படும்போது….
  • Ø  சிரிக்கும்போது….
  • Ø  உடலுறவுக்குப் பிறகு
  • Ø  பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகும்போது
  • Ø  குறிப்பாகப் பெண்கள், போர்வையால் முகத்தை மூடி தூங்கும்போது சுவாசித்த கார்பன்-டை ஆக்ஸைடையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் போது
  • Ø  ஒருவேளை உணவைத் தவிர்க்க நேரும்போது
  • Ø  அடிக்கடி காபி குடிப்பவர்கள் - காபி குடிக்கத் தவறும்போது,
  • Ø  சூரிய வெளிச்சம் படும்போது
  • Ø  பெட்ரோல் போன்ற கடின வாசனைகளை நுகரும் போது
  • Ø  ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன்
  • Ø  விரதம் இருக்கும்போது…..
  • Ø  தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்
  • Ø  புழுக்கம் அதிகரிக்கும் போது
  • Ø  அதிக பயணம்
  • Ø  அயர்ச்சி
  • Ø  அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம்
  • Ø  சாக்லேட் சாப்பிடும்போது
  • Ø  சீஸ், பன்னீர் சாப்பிடும்போது….
  • Ø  புளிக்க வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது..
  • Ø  குளிரூட்டப்பட்ட பானங்களைப் பருகும்போது
  • Ø  அதிகமாக காபி,டீ அருந்தும்போது
  • Ø  ஃபாஸ்ட்ஃபுட் வகைகளைச் சாப்பிடும்போது
  • Ø  மின் விசிறி அல்லது ஏசியின் தாக்கம்
  • Ø  எல்லாவிதமான உடல் இயக்கத்திற்குப் பிறகும்
  • Ø  விருந்து, கேளிக்கை, சினிமா என்று நேரம் கழித்துவிட்டு வந்தபிறகு
  • Ø  எண்ணைக் குளியலுக்குப் பின்பு….
  • Ø  தலைக்கு சாயம் அடிக்கும்போது
  • Ø  வெந்நீர் குளியலுக்குப் பின்பு
  • Ø  வலிப்பு இருப்பவர்களுக்கு….
  • Ø  இறுக்கமான உடை அணிவது
  • Ø  தலை வாரும்போது
  • Ø  தலையணை
  • Ø  வெப்பம்
  • Ø  விதம் விதமாக அணியும் கண்ணாடி
  • Ø  கழுத்து மற்றும் தலையைச் சுற்றி இறுக அணிந்து கொள்ளும் அணிகலன்கள் அல்லது ஆடைகள் அணிவதனால்
  • Ø  குளிர்இது போன்ற காரணிகள் தோலில் அதீத உணர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்..
  • Ø  முடியைப் பின்னால் இழுத்துக் கட்டும்போது
  • Ø  ஷேவ் செய்யும்போது
  • Ø  கண்ணாடி அணியும்போது
  • Ø  கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது
  • Ø  நெக்லஸ் அணியும்போது
  • Ø  இறுக்கமான உடை அணியும்போது
  • Ø  முகத்தில் தண்ணீர் வேகமாக பட்டு குளிக்கும் போது
  • Ø  கையிலோ, தலையணையிலோ முகத்தை மூடி இருக்கும்போது
  • Ø  வெந்நீரில் முகத்தைக் கழுவும்போது
  • Ø  பெண்களின் மாதவிலக்கின் போது….
  • Ø  குளிர்ந்த நீரில் முகம் கழுவும்போது போன்ற ஏதாவது ஒன்றால் ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகலாம்.


ஓற்றைத் தலைவலி வராமல் தவிர்க்க
  • ü    நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நோய் தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
  • ü    தலைவலி ஆரம்பித்தவுடன் படுத்துக் கொள்ள முயற்சி செய்யவும். இருண்ட அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதமாக அழுத்திவிடுதல், ஒத்தடம் போன்றவையும் இதமளிக்கும்.
  • ü    மன அழுத்தம்தான் பல நோய்களுக்குக் காரணம். அதைச் சரியாக கையாளுவது நம் கையில்தான் உள்ளது.
  • ü    தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஓய்வு எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.
  • ü    முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.
  • ü    அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ண நேரலாம். அது மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே மருந்துகளை சாப்பிடவேண்டும்


எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம்.


ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. முறையாக சிகிச்சை மேற்கொண்டால் தலைவலியிலிருந்து விடுதலை பெறுவது உறுதி.


விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற ஒற்றைத்தலைவலி, ஒருபக்க தலைவலி, பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – ஒற்றை தலைவலி, மைக்ரேன், Migraine, Headache,  – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


Please Contact for Appointment