Tuesday, April 25, 2017

ஒற்றைத் தலைவலியை தடுக்க – How to prevent Migraine headache

hoe to prevent migraine head ache tips in tamil


ஒற்றைத் தலைவலியை தடுக்க – How to prevent Migraine headache

உணவுமுறையில் மாற்றம்: - Change of diet habits
  • ·         சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

முறையான தூக்கம்: - Proper Sleep
  • ·         தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

உடற்பயிற்சி: - Regular Exercise
  • ·         உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

சுற்றுச்சூழலில் கவனம்: - Mind the environment
  • ·         அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

மது, புகை, காபி தவிர்த்தல் :- Avoid Coffee, Tea, Alcohol
  • ·         மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் : No Tension, Worries, Depression
  • ·         அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

தடுப்புமுறைகள்: - Migraine Prevention
  • ·         ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

மருந்துகள்: - Proper Prescribed medicines
  • ·         இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 - 99xxxxxxx0 – Migraine headache, one side head ache,  ஒற்றை தலைவலி, ஒரு பக்க தலைவலி,– 21st Oct, Sunday - Chennai ), You will receive Appointment details through SMS



==--==

Please Contact for Appointment